சென்னையில் காற்று மாசு இல்லை: மக்கள் பயப்படவேண்டாம்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை, நவம்பர்-11

சென்னையில் ஒட்டு மொத்தமாக காற்று மாசு என பரப்பப்படும் தகவல் உண்மை அல்ல என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

தமிழகத்தில் 28 இடங்களில் காற்றின் மாசை அளவிடும் நிலையங்கள் உள்ளன என்றும், சென்னையில் மட்டும் 8 இடங்களில் காற்றின் தரத்தை அறியும் நிலையங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் காற்று மாசு என்று பரப்பப்படும் கதை, வசனங்களை கேட்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஒரு சில இடங்களில் காற்று மாசு அடைந்ததற்கான காரணம் புல் புல் புயலின் தாக்கம் தான் என்றும் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *