சன் டி.வி. மூத்த ஒளிப்பதிவாளர் செந்தில் மறைவு

சென்னை, நவம்பர்-09

சென்னையில் உள்ள சன் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த செந்தில்குமார் உயர் ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்தார்.

சென்னை கொளத்தூர் ஜெய்ராம் நகரில் வசித்து வந்தார் செந்தில்குமார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். திடீரென்று, உயர் ரத்த அழுத்தம் காரணமாக ரத்தக் குழாய்கள் வெடித்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர உயர் ரக சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் செந்தில்குமார் இன்று உயிரிழந்தார். உற்றார், உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் என பலரையும் கவலையில் ஆழ்த்தி, காற்றோடு கலந்து விட்டார் செந்தில்.

அன்பும், அமைதியும் நிறைந்த கடின உழைப்பாளியான தன்னலமற்ற செந்தில், தனது உடல் நலத்தில் உரிய அக்கறையை செலுத்தாததால், மனைவி மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளை கண்ணீர் கடலில் கவிழ்த்து விட்டார்.

அவரது வீட்டு எண் 58, மூன்றாவது பிரதான சாலை, ஜெயராம் நகர், டான் பாஸ்கோ பள்ளி அருகில், கொளத்தூர், சென்னை-99, என்ற முகவரியில் வசித்த அவரது இல்லத்தில் செந்தில்குமாரின் உடல், நாளை (10/11/19) ஞாயிறு காலை 9 மணி வரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இறுதி மரியாதைகள் செய்யப்படுகிறது. குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி, அன்பு செலுத்திய உறவுகளுக்கு ஆறா துயரத்தை அளித்த செந்திலின் கனவுகள் நிறைவேற, தூய உள்ளங்கள் துணை நிற்கட்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *