அயோத்தி: பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும்-ராகுல்

புதுடெல்லி, நவம்பர்-09

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும். அனைவரும் சகோதரத்துவம், நம்பிக்கை, அன்பை பேணி காத்து உடன்பட வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

The Supreme Court has pronounced its verdict on the Ayodhya issue. Honoring this decision of the court, we all have to maintain mutual harmony. This is a time of brotherhood, trust and love among all of us Indians.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *