அயோத்தி தீர்ப்பு: இந்திய நீதி பரிபாலனத்தின் மைல்கல்-அமித்ஷா

புதுடெல்லி, நவம்பர்-09

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:  அயோத்தியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் சர்ச்சைக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இன்று அளித்துள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் மைல்கல்.

தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரும் அமைதி, மதநல்லிணக்கத்தை காக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண்பதற்காகப் போராடிய அமைப்புகள், சன்னியாசிகள், பெயர் தெரியாத மக்கள் லட்சக்கணக்கானோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *