அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்பு தான், நீதியல்ல-சீமான்

சென்னை, நவம்பர்-09

பாபர் மசூதி இடித்ததை சட்டவிரோதம் என கூறும் நீதிமன்றம், ஏன் அவர்களுக்கு தண்டனை வழங்கவில்லை என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

இந்த வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல. பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்சநீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்வித தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம். பாபர் மசூதி இடிப்பென்பது இஸ்லாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது என சீமான் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *