அனைவரும் ஒன்றிணைந்து ராமர் கோயில் கட்டுவோம்-மோகன் பாகவத்

புதுடெல்லி, நவம்பர்-09

பிரச்சினைகளை மறப்போம், அனைவரும் ஒன்றிணைந்து ராமர் கோயில் கட்டுவோம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.  இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதாவது: ”அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. தாமதமானாலும் சிறந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலம் தற்போது அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இருந்து வரும் மோதலுக்குத் தீர்வு வேண்டும் என விரும்பினோம். தற்போது அந்தத் தீர்வு கிடைத்துள்ளது. எங்கள் விருப்பம் நிறைவேறியுள்ளது.

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை யாரும்ம் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருத வேண்டாம். கடந்த காலங்களில் நடந்த பிரச்சினைகளை மறப்போம். அனைவரும் ஒன்றிணைந்து ராமர் கோயில் கட்டுவோம்” இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *