அயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்-ரஜினி

சென்னை, நவம்பர்-09

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன், அனைவரும் தீர்ப்பை மதிக்க வேண்டும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *