அயோத்தி தீர்ப்பு யாருடைய வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை-பிரதமர் மோடி

புதுடெல்லி, நவம்பர்-09

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தி வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:  உச்சநீதிமன்ற தீர்ப்பு யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கப்படாது. நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து தரப்பும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாக கருதுகிறேன். எந்த ஒரு பிரச்சனைக்கும் நீதித்துறை மூலம் ஏற்கத்தக்க வகையில் தீர்வு காண முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *