புதிய ராமர் கோயிலை நிர்வகிக்க அறக்கட்டளை அமைக்க உத்தரவு

புதுடெல்லி, நவம்பர்-09

அயோத்தியில் புதிதாக கட்டப்படும் கோயிலை நிர்வகிக்க அறக்கட்டளை ஒன்றை நிறுவ வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலமான அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் உள்ள அனைத்து நீதிபதிகளும் ஒருமனதாக அளித்த தீர்ப்பில், அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், அந்த கோயிலை நிர்வகிக்க புதிய அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். மேலும், அயோத்தியில் மாற்று இடத்தில் சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று கூறினர்.

புதியதாக கட்டப்படும் கோயில் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் என்றும் கூறியது. மசூதிக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதற்கும், கோயில் அறக்கட்டளை அமைப்பதற்கும் மூன்று மாதங்களுக்குள் ஒரு திட்டத்தை வகுக்க நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *