அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி!!!

புதுடெல்லி, நவம்பர்-09

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. 

அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது- அதன்படி, காலை 10.30 மணியளவில் தொடங்கி 11 மணி வரை தீர்ப்பை தலைமை நீதிபதி வாசித்தார். அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்று இருந்த 5 நீதிபதிகள் அமர்வும் ஒருமித்த தீர்ப்பை கொடுத்துள்ளனர்.

அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாராவின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ராம்லல்லா அமைப்பின் மனுவை ஏற்று சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 3 மாதத்தில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் அறக்கட்டளை ராமர் கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ளும் என்றும் கூறினர்.

பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அயோத்தியில் 5 ஏக்கர் பரப்பளவில் மாற்று இடம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதேபோல் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அமைக்க வேண்டிய அறக்கட்டளையில் நிர்மோஹி அகாராவுக்கு பிரதிநிதித்துவம் வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *