திருவள்ளுவர் நிலைப்பாட்டில் இருந்து பா.ஜ.க. பின்வாங்காது-முரளிதர ராவ்

சென்னை, நவம்பர்-08

திருவள்ளுவர் நிலைப்பாட்டில் பாஜக தெளிவாக உள்ளது என்றும், அதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்றும் பாஜக தேசிய செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிதரராவ், திருவள்ளுவர் கடவுள் மறுப்பாளர் இல்லை என்பதை, அவரது எழுத்துக்கள் மூலமே உணரமுடியும் என்றார்.

திமுக போன்ற கட்சிகள் அவரை கடவுள் மறுப்பாளராக முன்னெடுத்து செல்ல முடியாது. உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது. ரஜினி பாஜகவில் சேர்ந்ததாகவும் சேரவுள்ளதாகவும் பாஜக ஒருபோதும் கூறவில்லை என்றும் முரளிதர ராவ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *