பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்-சரத் பவார்

மும்பை, நவம்பர்-08

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் அதிக எம்எல்ஏக்களை கொண்ட கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி ஏன் அழைக்கவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவில் 228 சட்டப்பேரவைத் தொகுதிளில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கை சிவசேனா கோரி வருகிறது

தற்போதைய சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் முடிவடைவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில் சிவசேனா மிகவும் உறுதியுடன் உள்ளதால் பிரச்சினை தீரவில்லை.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்து பேசினார். பின்னர் பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க பாஜக – சிவசேனா கூட்டணிக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் கருத்து வேறுபாடுகளை தவிர்த்து ஆட்சியமைக்க வேண்டும். மகாராஷ்டிராவில் பொருளாதாரம் மற்றும் நலனுக்கு வலிமையான ஒரு அரசு அமைய வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு ஏற்படும்.

மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் அதிக எம்எல்ஏக்களை கொண்ட கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி ஏன் அழைக்கவில்லை. எனக்கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *