உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆலோசனை

புதுடெல்லி, நவம்பர்-08

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு அளிக்க உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உத்தர பிரதேச மாநில தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி ஆகியோரை சந்தித்து பேசினார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அயோத்தி நிலம் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் தலைமை செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி, டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் மற்றும் காவல்துறை மூத்த அதிகாரிகள் ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தீர்ப்பு வெளியாகும் போது உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *