நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி: விஷால் தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை, நவம்பர்-08

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சங்கம் செயல்படவில்லை என்பதால் தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை நியமித்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு தடை விதிக்க கோரியும், அவசர வழக்காக விசாரிக்க கோரியும், நடிகர் விஷால் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில், மூன்று உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தனி அதிகாரி நியமனம் தவறானது என விஷால் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்க தேர்தல் வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணையில் உள்ளதால் அந்த அமர்வில் பட்டியலிட பரிந்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *