வெற்றிடத்தை ஸ்டாலின் எப்பவோ நிரப்பிவிட்டார்-துரைமுருகன்

சென்னை, நவம்பர்-08

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என ரஜினிக்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம்; தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது தமிழகத்தின் தட்ப வெப்ப அரசியல் குறித்து நடிகர் ரஜினிகாந்திற்கு முழுமையாக தெரியவில்லை என்றும் ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார். ரஜினி எந்த கட்சியில் இணைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. அவருக்கு பாஜக காவி சாயம் பூசுவதும், இல்லாமல் போவதும் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்று துரைமுருகன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *