தமிழகத்தில் சரியான தலைமை இல்லை-ரஜினி

சென்னை, நவம்பர்-08

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல தனக்கு பாஜக சாயம் பூச முயற்சி நடப்பதாக கூறினார். நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்டி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறிப்போனது. 

சிறுது நேரத்திலேயே மீண்டும் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன.  சிலர் என் மீது பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள். அரசியலில் இது சகஜம். என்னுடைய முடிவு தான் இறுதியாகும்.

நான் எப்போதும் வெளிப்படையாக பேசக்கூடியவன். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அனைத்து தரப்பு மக்கள் அமைதி காக்க வேண்டும்.  பொருளாதாரத்தில் மந்தநிலை உள்ளது. அதனை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசியலில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது. அரசியல் கட்சி தொடங்கும் வரை திரைப்படங்களில் நடிப்பேன். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பதவியேற்கும் வரை திரைப்படங்களில் நடித்ததாகவும் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *