ரஜினியும், நானும் யார் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்-கமல்

சென்னை, நவம்பர்-08

சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையை ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தனர். இந்த விழாவில் பாலசந்தா் குடும்பத்தினா், இயக்குனர் மணிரத்னம், வைரமுத்து, நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், 44 ஆண்டுக்கு பிறகு ஐகான் விருது கொடுக்கிறார்கள் ஆனால் சினிமாவுக்கு வந்த முதல் ஆண்டிலேயே ஐகான் ஆனவர் ரஜினி. இந்த விருது தாமதமான கவுரவம் என்றாலும் தக்க சமயத்தில் தான் கவுரவித்துள்ளனர். ரஜினி பாணி வேறு, என் பாணி வேறு. நாங்கள் இருவரும் நிறைய சிரமங்களை கடந்தே இங்கு வந்தோம்.

இருவரும் வேறு வேறு பாதையில் பயணிக்க முடிவெடுத்தபோது எங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். ஒருவருக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். நாங்கள் யார் என்பதை புரிந்து வைத்துள்ளோம். எங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆனால் எங்களுக்கு நாங்கள் தான் முதல் ரசிகர்கள். அதேப் போன்று ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வோம், விமர்சிப்போம்.

சினிமாவை விட்டு விலகி விடுவதாக கூறிய ரஜினியை சத்தம் போட்டேன். நீங்கள் விலகினால் என்னையும் போகச் சொல்லி விடுவார்கள் என்றேன். எங்களை பிரிக்க ஏதாவது சொல்வார்கள், நாங்கள் காதில் போட்டுக் கொள்ள மாட்டோம். எங்களை யாராலும் பிரிக்க முடியவில்லை. விரைவில் ராஜ்கமலின் 50வது படம் பிரமாண்டமாய் துவங்கும். அதில் நான் நடிக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு கமல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *