தாய் வீடான சினிமாவை கமல் மறக்கமாட்டார்-ரஜினி

சென்னை, நவம்பர்-08

சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையை ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தனர். இந்த விழாவில் பாலசந்தா் குடும்பத்தினா், இயக்குனர் மணிரத்னம், வைரமுத்து, நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

இதன்பின்னர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: நீ தமிழ் மட்டும் கத்துக்கோ நான் உன்னை எங்கே உட்கார கொண்டு போய் உட்கார வைக்கறேன் பாரு என்று என்னிடம் முதன்முதலில் சொல்லியவர் இயக்குனர் இமயம் கே.பாலசந்தர். நேற்றும், இன்றும் கமலுக்கு மறக்க முடியாத நாட்கள். நேற்று கமல் தனது தந்தையின் சிலையை பரமக்குடியில் திறந்து வைத்தார். இன்று கமல் தனது கலையுலக தந்தையின் சிலையை திறந்து வைத்துள்ளார்.

அரசியலுக்கு வந்த பிறகும் தாய்வீடான சினிமாவை கமல் மறக்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் எடுத்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அபூர்வ சகோதரர்கள். அபூர்வசகோதரர்கள் படம் பார்த்து நள்ளிரவு நேரத்தில் கமல் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்து பாராட்டினேன். ராஜ்கமல் பிலிம்ஸ் எடுத்த தேவர்மகன் திரைப்படம் ஒரு மிகப்பெரிய காவியம். கமலின் ஹேராம் திரைப்படத்தை இதுவரை 30 முதல் 40 முறை பார்த்து உள்ளேன்

மார்லன் பிராண்டோவின் காட் ஃபாதர், சிவாஜியின் திருவிளையாடல் படத்திற்கு பிறகு அடிக்கடி ஹேராம் படத்தை பார்த்துள்ளேன். பாலச்சந்தருக்கு மிக மிக பிடித்த குழந்தை கமல்ஹாசன் தான். படப்பிடிப்பு தளத்தில் கமல் தூங்குவதை கூட பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார் பாலச்சந்தர். இவ்வாறு ரஜினி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *