அமெரிக்கா புறப்பட்டார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை, நவம்பர்-08

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று நவம்பர்-08ம் தேதி அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை அதிமுக கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

சென்னையில் இருந்து துபாய் செல்லும் துணை முதல்வர், அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் துணை முதல்வரின் மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். 

அதனைத் தொடர்ந்து வாஷிங்டன், ஹுஸ்டன், நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது அமெரிக்கா வாழ் தமிழர்களையும், தொழில் முனைவோர்கள், அதிபர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கவுள்ளார். மேலும் அமெரிக்காவை சேர்ந்த அமைப்பு ஒன்று துணை முதல்வருக்கு ‘International Rising Star Of  The Year Asia Award’ விருது வழங்கி கவுரவிக்கிறது.  அதன் பின்னர் வரும் 17- ஆம் தேதி துணை முதலமைச்ர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் திரும்ப இருக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *