ஸ்டாலின் மிசா கைதியா? ஆதாரத்துடன் வெளியிடுவேன்- அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை, நவம்பர்-08

மு.க.ஸ்டாலின் மிசா விவகாரம் தொடர்பாக 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பான விவாதம் மற்றும் அது தொடர்பாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் மாபா பாண்டியராஜனை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரின் உருவ பொம்மையையும் எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை கைவிடும்படி தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் மாபா பாண்டியராஜன், மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா, இல்லையா என்பது குறித்து 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பேன் என கூறியுள்ளார். எதற்கு கைதானேன் என்பதை மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கலாமே? அவர் மிசா சட்டத்தில் கைதானதற்கான காரணக் குறிப்பு இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *