ரஜினியின் “தர்பார்” பட மோஷன் போஸ்டர் வெளியீடு!!!

சென்னை, நவம்பர்-07

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மீயூசிக் வெளியிடப்பட்டுள்ளது.

தர்பார் பட மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். லைகா தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் கதா நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் மகேஷ்பாபுவும், மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் சல்மான்கானும் வெளியிட்டனர். இந்த திரைப்படத்தில் ரஜினியின் பெயர் ஆதித்யா அருணாசலம். மோஷன் போஸ்டரில் ரஜினி வில்லன்களோடு சண்டையிடும் காட்சி மற்றும் ரஜினியின் தோரணை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்திலும், அனிருத் தான் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் ரஜினிக்கு வரும் பின்னணி இசை ரசிகர்களை மெட்டு போட வைத்தது. அதேபோன்று, தர்பார் படத்திற்கு வரும் பின்னணி இசையும் நிச்சயம் ரசிகர்களை அதிகம் கவரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. போஸ்டர் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *