நிரம்பியது மேட்டூர் அணை

சேலம், செப்டம்பர்-7

மேட்டூர் அணை நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் முழுவது நிரம்பிவிட்டன. இந்த நிலையில் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 39 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுப்படுகிறது.

தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிலும், ஒகேனக்கல்லிலும் நீர்வரத்து வினாடிக்கு 79 ஆயிரம் கன அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 76 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று மேட்டூர் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டியுள்ளது.

இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை மற்றும் அதன் கரையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, செல்ஃபி எடுப்பதையோ தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *