7 நிறுவனங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை, நவம்பர்-07

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும், தலைமை செயலாளர் சண்முகமும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் புதிய நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின்போது ஈர்க்கப்பட்ட 8,835 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, லண்டனிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் தொடங்க அனுமதி அளிப்பது, உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *