பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சிலை திறப்பு

பரமக்குடி, நவம்பர்-07

மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாள் விழாவையொட்டி பரமகுடியில் அவரது தந்தை சிலையை திறக்கப்பட்டது.

மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் 65-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார். பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கமல்ஹாசனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தந்தை வழக்கறிஞர் சீனிவாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை கமல்ஹாசன், அவரது சகோதரர் சாருஹாசன் மற்றும் குடும்பத்தினர் திறந்து வைத்தனர். இதையடுத்து மக்கள் நீதிமய்யம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். தெளிச்சாத்தநல்லூரில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மையத்தையும் திறந்து வைத்தார். பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்க கட்டிடத்தில் தனது தந்தையின் உருவப்படத்தையும் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *