வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் மழை

சென்னை, நவம்பர்-07

வங்க கடலில், புல் புல் புயல் உருவாகியிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால், மத்திய வங்ககடல் பகுதிக்கு, தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று, நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்பொழுது புயலாக உருவாகியுள்ளது என்றார். “புல் புல்” என்று பெயரிடப்பட்ட இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கரை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறினார். 

தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில், நாளை முதல் 10ஆம் தேதி வரை வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக, வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறினார். சென்னையைப் பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *