நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி.கீதா நியமனம்

சென்னை, நவம்பர்-07

நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் நிலையில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன்-23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலையும், தேர்தல் தொடர்பான அறிவிப்பையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகும் நிலையில், பதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதாவை, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தயாரிப்பாளர் சங்கத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்ட போது, சேகர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *