நவ.10-ல் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

டெல்லி, நவம்பர்-07

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதார மந்தநிலை, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், வேளாண் பொருட்களுக்கு குறைவான விலை, வேலை வாய்ப்பின்மை போன்ற விவகாரங்களை எழுப்பி பொது போராட்டத்தில் ஈடுபடுவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. சோனியா காந்தி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *