மராட்டியத்தில் பட்னாவிஸ் தான் முதல்வர்-நிதின் கட்கரி உறுதி

நாக்பூர், நவம்பர்-07

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும். தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா கட்சி பிடிவாதம் செய்து வருகிறது. ஆனால், சிவசேனா தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் திட்டமிட்டுள்ளதாக தெளிவாகக் கூறிவிட்டதால், சிவசேனாவுக்கு பாஜகவுடன் சேர்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலை இருக்கிறது.

ஆனாலும், சிவசேனா கட்சி பிடிவாதத்துடன் இருந்து வருகிறது. நாளைக்குள் புதிய ஆட்சி அமைக்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் என்பதால், பாஜக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரத் தயாராகி வருகிறது.

இந்த சூழலில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்திக்க உள்ளார். இதற்காக நாக்பூருக்கு கட்கரி வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைவதற்கும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, இதில் அவரை இழுக்க வேண்டாம்.

மகாராஷ்டிராவில் சிவசேனா துணையுடன் பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்பார். நான் டெல்லி அரசியலில் இருப்பதால், மீண்டும் மாநில அரசுக்கு திரும்பும் எண்ணம் இல்லை. மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக மிக விரைவில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *