நான் இருக்கிறேன் என விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டிய மோடி

பெங்களூரு, செப்டம்பர்-7

இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலையடைய வேண்டாம், விரைவில் வெற்றியை ஈட்டுவோம், விண்வெளியில் புதிய உச்சம் இனிதான் வரவிருக்கிறது என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை காண பெங்களூருவில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சியை காண்பதற்கு பிரதமர் மோடி இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்திருந்தார். ஆனால், லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டதால், விஞ்ஞானிகள் நம்பிக்கையோடு இருக்கும்படி ஊக்கப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் இன்று காலை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சிலமணி நேரங்களாக நாடு முழுவதும் கவலையில் ஆழ்ந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தாய்நாட்டிற்காக உழைப்பவர்கள் விஞ்ஞானிகள் என்றும், சந்திரயான் திட்டத்தின் சிறு பின்னடைவு விஞ்ஞானிகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தை தாம் உணர்வதாக தெரிவித்தார்.

நாம் நிலவை தொடும் முயற்சி நிச்சயமாக நிறைவேறும் என்று கூறிய மோடி, அடுத்தகட்ட முயற்சிகளில் நாம் அதிகம் கவனம் செலுத்தவேண்டி உள்ளதாக குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சிக்கு நம்ப முடியாத அளவுக்கு உழைத்த விஞ்ஞானிகளுடன் தானும், நாடும் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *