சென்னையில் 15 மண்டலங்களில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்…

சென்னை நவம்பர்-0 7

சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில்  ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று தொடங்கியுள்ளது .

சென்னையில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னையில் மழைக்காலத்தில் பரவும் நோய்களை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாநகர வீதிகளில் குப்பைகள் தேங்காமல் தடுக்கவும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவும் மாநகராட்சி ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னை என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் அடிப்படையில் சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ‘என் வீதி் என்ன உன் கழிப்பறையா?’, ‘குப்பை’ தொட்டிக்கு அழகு!, ‘கொசுக்களை நசுக்குவோம்’! என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ சுகாதார தூதுவர்களை முன்னிறுத்தும் டிஜிட்டல் மற்றும் ஆட்டோ பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் பள்ளி மாணவ சுகாதார தூதுவர்கள் 3 பேர் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்ற  ஆட்டோக்கள், சென்னையின் 15 மண்டலங்களிலும் இன்றும், நாளையும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டலங்களிலும் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் அனைத்து பகுதிகளிலும் இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது.

இதேபோல் சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ‘என் வீதி் என்ன உன் கழிப்பறையா?’, ‘குப்பை தொட்டிக்கு அழகு’!, ‘கொசுக்களை நசுக்குவோம்’! என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மாநகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ளன.

சென்னையில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

குறிப்பாக என் வீதி என்ன உன் கழிப்பறையா? என்ற சுவரொட்டி பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. சுவரொட்டிகள் மட்டுமின்றி மாநகரப் பேருந்துகளிலும் இதே விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ சுகாதார தூதுவர்கள் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு பிரச்சாரம், வீடுகளையும், வீதிகளையும், பொது இடங்களையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உள்ளன.

சென்னையில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

இறுதியாக மாநகராட்சியின் 20 ஆயிரம் பள்ளி மாணவ சுகாதார தூதுவர்கள் தங்கள் பள்ளிகள் அருகாமையில் உள்ள வீதிவழி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

மழைநீர் சேகரிப்பு, மழைக்கால நோய்தடுப்பு என்று மாநகரை கலக்கி வரும் இத்தகைய நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக பொதுமக்களோடு இணைந்து மக்கள் பிரச்சனைகளுக்கு அரசின் தீர்வு என்கிற வகையில் செயல்பட்டுவரும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இந்த வீதிவழி விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *