டெல்லியில் வழக்கறிஞர்-போலீசார் மோதல்: அதிர்ச்சி வீடியோ

டெல்லி, நவம்பர்-07

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமையன்று பார்க்கிங் தகராறு காரணமாக வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையில் முடிந்தது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 20 போலீசார், 8 வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கி தீ வைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் வக்கீல்களை தாக்கியது தொடர்பாக 2 உயர் போலீஸ் அதிகாரிகளையும், 2 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது. இது டெல்லி போலீசார் அனைவர் மனதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வக்கீல்களுக்கு பதிலடியாக, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் டெல்லி போலீசார் சாலையில் திரண்டு திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

அப்போது “பாதுகாவலர்களை பாதுகாத்திடுங்கள்” என எழுதப்பட்டு இருந்த பதாகைகளை ஏந்தி நீதி கேட்டு கோஷம் எழுப்பினர். டெல்லி போலீசாரின் குடும்பத்தினர் இந்தியா கேட் பகுதியில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஒரு சில இடங்களில் வழக்கறிஞர்களும், போலீசாரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அனைத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணைகளுக்கு ஆதாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

\

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *