பயிர்க் கழிவு எரிப்பதை தடுக்க விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வழங்க உத்தரவு

புதுடெல்லி, நவம்பர்-07

பயிர்க் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான எந்திரங்களை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதே டெல்லியில் காற்று மாசுஅதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. விவசாயக் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை வாங்க அரியானா, பஞ்சாப் அரசுகள் விவசாயிகளுக்கு மானியம் வழங்குகின்றன.

இருப்பினும் இப்பிரச்சனையை அதிகாரிகள் சரிவர கையாளவில்லை என உச்சநீதிமன்றம் கடுமை காட்டியுள்ளது. இந்நிலையில், பயிர்க் கழிவுகளை எரிக்காமல் கையாள எந்திரங்களை வழங்க முன்னுரிமை அளிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஆக்கப்பூர்வ நிர்வாகம் மற்றும் திட்ட அமலாக்கம் தொடர்பான “பிரகதி” ஆலோசனைக் கூட்டத்தின்போது, காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் இந்த அறிவுரையை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். காற்று மாசு சூழல் குறித்து தொடர்ந்து கவனிக்குமாறு அமைச்சரவைச் செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர் ஆகியோருக்கு மோடி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *