தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால், மகேஷ் பாபு!!!

சென்னை, நவம்பர் 06

4 மொழிகளில் ரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

ரஜினிகாந்தின் “தர்பார்” படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. நாளை (7 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

இந்த போஸ்டரை தமிழில்  கமல்ஹாசனும், பாலிவுட்டில் சல்மான்கானும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் வெளியிடுகிறார்கள். படத்தின் மோஷன் போஸ்டர் கமல்ஹாசனின் பிறந்த நாளில்  வெளியிடப்படுகிறது. தீம் மியூசிக்கும் நாளை வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *