ஆர்பிட்டரின் அதிரடி வேலைகள் என்ன?

செப்டம்பர்-7

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனதால் சந்திரயான் திட்டமே தோல்வி எனக்கருத முடியாது. நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வரும் ஆர்பிட்டர் இந்த திட்டத்தின் 95 சதவீத பணிகளை செய்யும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 2 கடந்த ஜூலை மாதம் பெங்களூருவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. சந்திரயான் 2–ல் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று விண்கலன்கள் பொருத்தப்பட்டிருந்தது. நிலவை நோக்கி பயணித்த சந்திரயானின் ஆர்பிட்டர் கடந்த 2-ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

தற்போது பெருதும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனது. இந்த நிலையில், நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர் தன்னுடைய பணியை வழக்கம்போல் செய்யும் என விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் வட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டரில் 8 முக்கியமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்பிட்டர் நிலவை ஓராண்டு சுற்றி வந்து தன்னுடைய பணியை செய்யும் எனவும் கூறப்படுகிறது. 2379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டரின் முக்கிய பணியே புகைப்படங்கள் எடுப்பது தான்.

டெர்ரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera) எனும் கருவி தரைப்பகுதியை துல்லியமாக படம் எடுத்து அனுப்பும்.

கிளாஸ் என பெயரிடப்பட்ட ஸ்பெக்ட்ரோ மீட்டர் (Class Spectro Meter) கருவி அலுமினியம், சிலிகான், கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட கனிமங்கள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யும்.

சோலார் எக்ஸ்ரே மானிட்டர் (Solar X Ray Moniter) நிலவின் சூரிய கதிர்வீச்சுகளை கண்காணிக்கும்

(Orbiter High Resolution Camera) நிலவின் மேற்பரப்பை மிக துல்லியமாக படமெடுத்து அனுப்பும்.

(Imaging I.R. Spectro Meter) நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான உள்ளீடுகளை அளிக்கும்.

DFSAR என்ற கருவி நிலவின் துருவபகுதிகள் குறித்த வரைபடத்தை உருவாக்க உதவும்.

CHACE-2 என்ற கருவி நிலவின் புறவளி மண்டலம் குறித்து ஆய்வு செய்யும் எனவும் DFRS அமைப்பு நிலவின் அயன மண்டலத்தை ஆய்வு செய்யும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *