8-ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்டம் ரத்து..!

சென்னை, நவம்பர்-06

8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், முப்பருவப் பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்புக் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

அதன்படி, முதற்கட்டமாக 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டு ஒரே பாடத்திட்டமாக செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *