பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுஜித்திற்கு செலுத்தும் அஞ்சலி

சென்னை, நவம்பர்-06

பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதே சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்றது. 

அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், தீயணைப்பு துறை பொறுப்பு டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 

அப்போது பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சுஜித் மீட்புப் பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கு தெரியும். குழந்தை சுஜித் போன்று இன்னொரு மரணம் ஏற்படக்கூடாது என அரசு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதே சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *