செல்போனை ஆஃப் பன்னிட்டு குழந்தைகளோடு பேசுங்கள்-பள்ளிக்கல்வித்துறை

சென்னை, நவம்பர்-06

செல்போன் இல்லாமல் குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் செலவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவிக்கும் போது, நவம்பர் 14-ம் தேதி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பெற்றோர்கள் அனைவரும் தங்கள் கைபேசியை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தங்களது குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்த ஒரு மின் சாதன பொருட்களையும் பயன்படுத்த கூடாது என்றும், இந்த செயலை அந்த ஒரு நாள் மட்டுமே செய்து விடாமல் தினமும் கடைபிடித்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது மிக சிறந்தது என தெரிவித்துள்ளார்.

இதுதவிர குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல் தொடர்பாக தேவைப்படும் வழிகாட்டுதல்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்களுக்கு இது குறித்த விவரம் தேவை என்றால் இந்த வழிகாட்டுதலை இணையதளம் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் அதில் ஒரு சில குறிப்பிட்ட கேள்விகளும் கேட்கப்படும். அந்த கேள்விகளுக்கு பெற்றோர்கள் பதில் அளித்தால் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *