சர்வதேச யோகா மையம்… முதலமைச்சர் அடிக்கல்…

சென்னை, நவம்பர்-06

செங்கல்பட்டில், 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 50 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள, சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மைய கட்டிடங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதாரத்துறையின் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 50 ஏக்கர் பரப்பளவில் அமையும் சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மையத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியக்கூடிய 10 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்-சிடி ஸ்கேன் சேவை மையத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனையில் உடனடி உதவி தொலைபேசி வசதியை முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார். திருப்பூர், நாமக்கல், கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருநெல்வேலி, திருச்சி, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்களின் பயன்பாட்டையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *