திருவள்ளுவரை அரசியலாக்குவது வேதனையளிக்கிறது-ஜெயக்குமார்

சென்னை, நவம்பர்-06

திருவள்ளுவரை அரசியலாக்குவது வேதனையளிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: திருவள்ளுவர் சாதி மதங்களை கடந்த தெய்வப் புலவர் கமலின் பிறந்தநாளுக்கு கமல் முகத்தை திருவள்ளுவரோடு ஒட்டிவிட்டால் கமல் திருவள்ளுவர் ஆகிவிடமாட்டார். திருவள்ளுவரை அரசியல்படுத்துவது வேதனையளிக்கிறது திருவள்ளுவர் மீது மதச்சாயம் பூசக்கூடாது குறளை படிக்காதவன் அரை மனிதன் குறளை படித்தவன் முழு மனிதன். உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயாராகத்தான் இருக்கிறது.

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்பவர்களை சமூகம் மன்னிக்காது. புயல்தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் மீனவர்களுக்கு சரியாக சென்று சேர்ந்துள்ளது 741 படகுகள் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சென்னையில் முக்கிய சாலைகள் இதுவரை சீரமைக்கப்படாமல் இருக்கிறது இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்க போகிறது? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சாலைகள் சீரமைக்க டெண்டர்கள் விடப்பட்டுள்ளனர். விரைவில் சாலைகள் சீரமைக்கப்படும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கக்கூடாது இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.