கொடநாடு வழக்கு: சயனின் குண்டர் சட்டம் ரத்து

நவம்பர்-06

கொடநாடு வழக்கில் கைதான சயனுக்கு விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23 -ஆம்தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையதாக சயன், வாளையாறு மனோஜ், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, சதீஷன், மனோஜ் சாமி, தீபு, சந்தோஷ் சாமி,  பிஜின்குட்டி, உதயகுமார் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் முதல் எதிரியாக அறிவிக்கப்பட்டுள்ள சயன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 30 -ஆம் தேதி நடைபெற்றபோது 10 பேர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட 13 பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.  இந்நிலையில் கொடநாடு வழக்கில் கைதான சயனுக்கு விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *