கல்லூரி மாணவரை சுட்டுக்கொன்ற விஜய் நீதிமன்றத்தில் சரண்

சென்னை, நவம்பர் 06

சென்னை அருகே நண்பரின் வீட்டிற்கு சென்ற பாலிடெக்னிக் மாணவரை, துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தப்பிச்சென்ற விஜய் என்பவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

சென்னை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ், தாம்பரம் அடுத்த வேடமங்கலத்தில் தனது நண்பர் விஜய் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் ஒரு அறையில் பேசிக் கொண்டிருக்க, விஜய்யின் அண்ணன் உதயா மற்றும் அண்ணி ஆகியோர் வேறு அறையில் இருந்துள்ளனர். திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால் இருவரும் ஓடிச்சென்று பார்த்தபோது, முகேஷ் நெற்றியில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதற்குள் துப்பாக்கியுடன் விஜய் தப்பியோடினார்.

முகேஷை மீட்டு மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், முகேஷ் உயிரிழந்தார். இது குறித்து தாழம்பூர் போலீசார், அண்ணன் உதயாவை பிடித்து விசாரித்தனர். விஜய்யின் பெற்றோர், அண்ணன் ஆகியோரும் தலைமறைவாகினர். உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கும் விஜய்க்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது தெரியாமல் போலீசார் குழம்பி போயிருந்தனர். இந்நிலையில், கல்லூரி மாணவர் முகேஷை சுட்டுக் கொலை செய்துவிட்ட தப்பியோடிய, தேடப்பட்டு வந்த குற்றவாளி விஜய், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *