பா.ஜ.க. சதி செய்கிறது- சிவசேனா சஞ்சய் ராவத்

மும்பை, நவம்பர் 06, 

பாஜக சதி செய்வதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல் அமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அதன் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். மராட்டியத்தில் அரசு அமைப்பதற்கு சிவசேனா 2 நாட்கள் காலக்கெடுவை நிர்ணயித்து உள்ளது.

இந்த நிலையில், இது குறித்து சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது:- சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் நாங்கள் ஒப்புக்கொண்ட திட்டம் குறித்து மட்டுமே நாங்கள் விவாதிப்போம். புதிய திட்டங்கள் எதுவும் இப்போது பரிமாறப்படாது. பாஜக மற்றும் சிவசேனா இடையே தேர்தல்களுக்கு முன்னர் முதல்வர் பதவி குறித்து ஒரு உடன்பாடு ஏற்பட்டு இருந்தது. அதன் பின்னரே நாங்கள் தேர்தலுக்கான கூட்டணிக்கு முன்னேறினோம்.

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தினால் அது மக்களுக்கு அநியாயமாக இருக்கும். ஜனாதிபதி ஆட்சி அமைந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். சிவசேனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. சதி செய்பவர்கள் மக்களின் ஆணையை அவமதிக்கிறார்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *