பா.ஜ.க.வில் இணைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்…

சென்னை, நவம்பர்-05

கடந்த மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி ஓராண்டிலேயே மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்தித்தது. மக்கள் நீதி மய்யம் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் அந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்றது. இருப்பினும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 3 வேட்பாளர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதில், ராஜேந்திரன்-அரக்கோணம், ஸ்ரீகாருண்யா-கிருஷ்ணகிரி, ரவி-சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *