அப்துல்கலாம் பெயரிலேயே விருது: எதிர்ப்புகளால் பின்வாங்கிய ஜெகன்

விசாகப்பட்டினம், நவம்பர்-05

எதிர்ப்பு வலுத்ததால் தனது தந்தை பெயருக்கு மாற்றி அறிவித்த விருதை ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் அப்துல்கலாம் பெயரில் அறிவித்து உள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விருதுகள், உயர்படிப்புக்கான கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அப்துல்கலாம் பிரதிபா புராஸ்கர் பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருதின் பெயர், ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் பெயராக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் டுவிட்டரிலும் #YSRCPInsultsAPJAbdulKalam என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு வலுக்கவே, அரசாணையை ரத்து செய்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். முன்னதாக இருந்த, கலாம் பெயரிலே மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *