ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள்: ப.சிதம்பரம் டுவீட்

புதுடெல்லி, நவம்பர்-05

உலக மக்கள் அனைவருக்கும், எந்த காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்துள்ள உலக பொதுமறை திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு மதசாயம் பூசக்கூடாது என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், திருவள்ளுவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என பல்வேறு கருத்துகள் சமீபகாலமாக நிலவி வருகின்றன.

இந்நிலையில், தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ’நாணாமை நாடாமை’ எனத் தொடங்கும் குறளை இயற்றினார் என்று தோன்றுகிறது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தினர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒரு குறளை இயற்றினார் என்று தோன்றுகிறது.

“நாணாமை நாடாமை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்” -குறள் 833

பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின் தொழில்கள் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *