கொடைக்கானல் எரியில் படகு சேவைக்கு தடை

மதுரை, நவம்பர்-04

கொடைக்கானல் ஏரியில் போட் கிளப் மற்றும் தனியார் ஓட்டல் சார்பில் படகு சேவை நடத்த தடை விதித்தும், போட் கிளப்பை மூடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஏரியை ஒட்டியுள்ள 8 சென்ட் நிலம் போட் கிளப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த குத்தகை காலம் செப். 1-ல் முடிவடைந்து, கொடைக்கானல் ஏரி கடந்த 2009-ம் ஆண்டே நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனாலும், ஏரியை போட் கிளப் தான் முழுமையாக பயன்படுத்தி வருகிறது. இதனால் கிடைக்கும் வருவாயை நகராட்சிக்கும், மீன்வளத்துறைக்கும் செலுத்துவதில்லை. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. கொடைக்கானல் நகராட்சி வக்கீல் முகம்மது முகைதீன் வாதிடுகையில், போட் கிளப்பிற்கான குத்தகை காலம் முடிந்து விட்டது. இதுவரை குத்தகை நீட்டிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கொடைக்கானல் ஏரியில் போட் கிளப், தனியார் ஓட்டல் சார்பில் படகு சேவை நடத்த தடை விதித்தும், போட் கிளப்பை உடனடியாக மூடவும் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *