டெல்லி காற்று மாசு: பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி, நவம்பர்-04

தலைநகர் டில்லியில் காற்று மாசு கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

டில்லியில், காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. தலைநகரில், பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாத வகையில் தலைநகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. குழந்தைகளின் நலன் கருதி, பள்ளிகளுக்கு 8 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள் முக கவசம் அணிந்தபடி பணியை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்தும், குஜராத் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், பிரதமரின் முதன்மை செயலர், ஆலோசகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

One thought on “டெல்லி காற்று மாசு: பிரதமர் மோடி ஆலோசனை

 • March 8, 2020 at 6:28 pm
  Permalink

  I’m impressed,I have too admit. Rareely do I encounter a blog that’s oth equally educative and amusing, and without
  a doubt, yyou have hit the nail on the head. The issue iis an issue that too few folks are speaking intelliently about.
  I’m very happy that I came across this during
  my hunt ffor something rwgarding this.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *