துப்பாக்கியால் சுடப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி பலி

சென்னை, நவம்பர்-05

சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த முகேஷ் (19). இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய நண்பர் விஜய். விஜய்யும் முகேஷும் ஒரே அறையில் பேசிக்கொண்டிருக்கையில் அங்கிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது.

அருகில் உள்ளவர்கள் அறைக்குள் சென்று பார்க்கும் பொழுது முகேஷ் ரத்தவெள்ளத்தில் இருந்துள்ளார். விஜய் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். அவரை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முகேஷிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் 25 போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய விஜய் மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கி குறித்தும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். பாலிடெக்னிக் மாணவர் மீது மற்றொரு மாணவர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *