தமிழகத்தில் காற்று மாசு இல்லை-ராதாகிருஷ்ணன்

சென்னை, நவம்பர்-05

டெல்லியில் உள்ளது போன்று தமிழகத்தில் காற்று மாசு இல்லை என்றும் சென்னையில் காற்று மாசு என சிலர் வதந்தி பரப்பி வருவதாகவும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திருச்சி ஜங்ஷன் கலையரங்க வளாகத்தில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், காற்று மாசு குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து கவனித்து வருவதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத 9 ஆயிரத்து 940 ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திறந்து கிடக்கும் சாலையோர கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் குறித்து தமிழகம் முழுவதும் 1077 என்ற எண்ணையும் மாவட்ட வாரியாக 1070 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *