நடிகை மீராமிதுன் மீது வழக்குப்பதிவு

சென்னை, நவம்பர்-05

காவல் துறையை இழிவாகப் பேசி, ஹோட்டல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். இவர் சமீபத்தில் தனியார் ஓட்டல் ஒன்றில் அளித்த பேட்டியில் காவல் துறையை இழிவாகப் பேசினார்.  

”என் மீது பல எப்.ஐ.ஆர்கள் போடப்பட்டன. அதை நான் முன்ஜாமீன் வாங்கி ரத்து செய்தேன். ஆனாலும் மேலும் மேலும் என் மீது எப்.ஐ.ஆர் போடுகிறார்கள். சிலர் கொடுக்கும் லஞ்சத்தை வாங்கிக்கொண்டு தமிழ்நாடு போலீஸார் என் மீது பொய் வழக்குகள் போடுகின்றனர். பணம் கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்கு போடுவார்கள். 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உங்கள் மீதுகூட பொய் வழக்கு போடுவார்கள்” என செய்தியாளர்களிடம் மீரா மிதுன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஹோட்டல் அலுவலர் அருண் (27) என்பவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி போலீஸார் நடிகை மீரா மிதுன் மீது பொது இடத்தில் அவதூறாக, இழிவாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோன்று நடந்துகொண்டதால் மீரா மிதுன் மீது இதே பிரிவின்கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *